WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 6, 2016

அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, டிச., 7ல் துவங்கி, 23ல் முடிகிறது.இது குறித்து, பள்ளி கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன்
வெளியிட்டுள்ள அறிவிப்பு: பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு, மாநில அளவில், பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிச., 7ம் தேதியும்; 10ம் வகுப்புக்கு, டிச., 9ம் தேதியும் தேர்வுகள் துவங்கும். டிச., 7, 8ல், மொழித் தாள்கள்; டிச., 9, 10ல், ஆங்கிலம்; டிச., 14, 15, 16, 19, 21, 23ல், முக்கிய பாடங்களுக்கு தேர்வு நடக்கும். காலை, 10:00 மணிக்கு துவங்கும் தேர்வு மதியம், 1:15க்கு முடியும். 10 நிமிடம் வினாத்தாள் படிக்கவும், 5 நிமிடம் மாணவர்களின் விபரங்களை எழுதவும் நேரம் வழங்கப்படும். டிச., 9, 10ல், மொழித்தாள்கள்; 14, 15ல், ஆங்கிலம்; 17ல், கணிதம்; 19ல், அறிவியல்; 21ல், விருப்ப மொழி; டிச., 23ல், சமூக அறிவியல். காலை, 10:00 முதல் பகல், 12:45 வரை தேர்வு நடக்கும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.