WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 21, 2016

20 சதவீதம் இடைக்கால நிதிஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நடைமுறை படுத்தும் வரை இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும்' என, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலத்தலைவர் மோசஸ் தெரிவித்தார்.திண்டுக்கல்லில் இச்சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் கூறியதாவது: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியகுழு நிர்ணயித்த ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்திலும் வழங்க அரசு முயற்சி எடுத்துள்ளது.அதற்காக நியமிக்கப்பட்டக்குழு பணியை துவங்குவதற்கு முன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு இடைக்கால நிதியாக 20 சதவீதம் வழங்க வேண்டும். இல்லாவிடில் டிச.,28ல் சென்னையில் 15 ஆயிரம் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.