WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 21, 2016

எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு 'நீட்' தேர்வு எப்போது?.

மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு அறிவிப்பு, இன்னும் இரு வாரங்களில் வெளியாகும்' என, தகவல்கள் வெளியாகி உள்ளன. 'எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் தவிர, அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு கட்டாயம்' என, கடந்த ஆண்டு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, கடந்த ஆண்டுக்கு மட்டும், 'நீட்' தேர்விலிருந்து, மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும், தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், தனியார் கல்லுாரிகளின், மருத்துவ மாணவர் சேர்க்கை, 'நீட்' தேர்வு அடிப்படையிலேயே நடந்தது. வரும் ஆண்டிற்கான, 'நீட்' தேர்வு, மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு டிசம்பர் முதல் விண்ணப்பங்களை பெற, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது. அதனால், இரு வாரங்களில், 'நீட்' தேர்வுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.