புதிய 2000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் செயற்கைக் கோளை பெருமைப்படுத்தும் வகையில் அதன் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. மங்கள்யான் : செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய, 2013ம் ஆண்டு நவ., 5ம் தேதி, பி.எஸ்.எல்.வி.,-சி - 25 ராக்கெட் மூலம் ‛மங்கள்யான்' செயற்கைக்கோளை இந்தியா விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் இந்த சாதனைப் பயணத்தை அனைவரும் நினைவில் கொள்ளும் வகையில், புதிதாக வெளியாக உள்ள 2,000 ரூபாய் நோட்டில் மங்கள்யான் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. புதிய 500 ரூபாய் நோட்டில் டில்லி செங்கோட்டையின் படம் அச்சிடப்பட்டுள்ளது. இதுவரை.. ரூ.50 - பார்லிமென்ட் ரூ.100 - இமயமலை பழைய ரூ.500 - காந்தியின் தண்டி யாத்திரை பழைய ரூ.1000 - தொழில்நுட்ப வளர்ச்சி புதிய நோட்டுகளில்.. புதிய ரூ.500 - டில்லி செங்கோட்டை புதிய ரூ.2000 - மங்கள்யான்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.