WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 9, 2016

'நெட்' தேர்வு விண்ணப்பம் : நவ., 15ல் முடியுது அவகாசம்.

பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்னும் ஒரு வாரம் மட்டுமே அவகாசம் உள்ளது. கல்லுாரி மற்றும் பல்கலைகளில்,
பேராசிரியர் பணியில் சேர, மத்திய அரசின், 'நெட்' தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மத்திய அரசின் உதவித்தொகையில், பல்கலைகள், கல்லுாரிகளில் முழுநேர ஆராய்ச்சி மாணவராக சேரவும், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஆண்டுக்கு இரு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில், அடுத்த தேர்வு, ஜன., 22ல் நடக்கிறது. அதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, அக்., 15ல் துவங்கியது. விண்ணப்பிக்கும் அவகாசம், நவ., 15ல் முடிகிறது. இதற்கு, ஒரு வாரமே உள்ளது. ஜூலையில் நடந்த, 'நெட்' தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியாகாததால், பட்டதாரிகள் பலர், அடுத்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதா; வேண்டாமா என, குழப்பத்தில் உள்ளனர். 'இந்த வார இறுதிக்குள், தேர்வு முடிவு வெளியாகும்' என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.