WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 9, 2016

ஆசிரியர்களுக்கு பணி : சி.பி.எஸ்.இ., தடை.

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து உள்ளது. இது தொடர்பான
புகார்கள் குறித்து, சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து, 'ஆசிரியர்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பணி, மக்கள்தொகை கணக்கெடுப்பு, வாக்காளர் பட்டியல் ஆய்வு உள்ளிட்ட பணிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், பள்ளி வாகனங்களில், ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்ற விதியையும், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் திருத்தியுள்ளது. அதன்படி, பள்ளி வாகனங்களில், உதவியாளர் ஒருவருடன், ஆசிரியருக்கு பதில், பெண் ஊழியர் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.