WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 17, 2016

அரசு ஊழியர்களுக்கு 3 மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க கோரிக்கை.

தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் மாற்றி வருகின்றனர். இதில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் விதிவிலக்கல்ல. அரசு ஊழியர்கள் வங்கிகளில் தவம் கிடப்பதால் பணியும் பாதிக்கப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி முன்பணம், கல்வி, குடும்ப தேவைக்காக பெற்ற கடன் தொகைக்காக பணம் எடுக்க சிரமப்படுகின்றனர்.  சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஊதியத்தில் 25 சதவீதத்தை வாடகையாக செலுத்துகி்ன்றனர். இதை தவிர மாதம் தோறும் குழந்தைகள் கல்விக்கட்டணம், மருத்துவச் செலவு உள்ளிட்ட செலவுகளை தற்போதைய வங்கி கட்டுப்பாட்டினால் மேற்கொள்ள முடியாமல் உள்ளனர். வருமான வரித்துறைக்கு கணக்குகளை முறையாக சமர்ப்பிக்கும் ஊழியர்கள் தங்கள் பண இருப்பை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது. எனவே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தாமல் ரொக்கமாக வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.