Saturday, November 12, 2016
'தமிழகத்தில் டிச.30 வரை அனைத்து வங்கிகளும் விடுமுறையின்றி செயல்படும்'.
ரூ.500, 1000 நடவடிக்கையை அடுத்து, தமிழகத்தில் அனைத்து வங்கிகளும் டிசம்பர் 30-ம் தேதி வரை விடுமுறையின்றி செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி தென் மண்டல மேலாளர் சதக்கத்துல்லா வெளியிட்ட செய்தியில், 'ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்ற வாடிக்கையாளர்கள் பெருமளவில் வங்கிகளில் குவிந்து வருவதால், வாடிக்கையாளர்கள் சிரமத்தினை குறைக்க உதவுமாறு விடுமுறை நாட்களிலும் வங்கிகள் டிசம்பர் 30-ம் தேதி வரை செயல்படும்.
எனவே, டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை இல்லை' என்று அவர் கூறியுள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 3-வது நாளாக இன்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வங்கிகளுக்கு வந்ததால் வங்கி ஊழியர்கள் சமாளிக்க முடியாமல் திணறினர்.
மத்திய அரசு கடந்த 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. அவற்றை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளை வாங்கிக் கொள்ளும்படி கூறியது. இதையடுத்து, ஏராளமானோர் நேற்றுமுன்தினம் வங்கிகளுக்குச் சென்று தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை மாற்றினர். முதல் நாளன்று அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது.
2-வது நாளாக நேற்றும் ஏராளமானோர் தங்கள் பணத்தை மாற்ற வங்கிகளுக்கு வந்தனர். இதனால் வங்கி ஊழியர்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் திணறினர். இன்றைக்கும் அதே நிலைதான் பெரும்பாலும் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.