Sunday, November 6, 2016
'குரூப் - 4' தேர்வில் 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., இன்று நடத்தும், குரூப் - 4 தேர்வில், 'ஸ்மார்ட் வாட்ச்' அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு துறையில், 5,451 காலியிடங்களுக்கு, குரூப் - 4 தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட மையங்களில், 15 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 10:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை நடக்கும் தேர்வுக்கு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
● மாணவர்களை தவிர, அவர்களின் உறவினர், பெற்றோர் என, வேறு யாருக்கும் தேர்வு வளாகத்திற்குள் அனுமதி இல்லை
● மொபைல் போன், கணினி சாதனங்கள், 'கால்குலேட்டர், ஸ்மார்ட் நோட் புக்ஸ், ஸ்மார்ட் வாட்ச்' மற்றும் மோதிரம், கைப்பை உள்ளிட்ட பொருட்கள், தேர்வறையில் அனுமதிக்கப்படாது.
இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.