WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 6, 2016

விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வழக்கறிஞர்களுக்கு 'கெடு'.

கல்வி சான்றிதழ்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க, இம்மாதம் இறுதி வரை, வழக்கறிஞர்களுக்கு அவகாசம் தரப்பட்டுள்ளது. பார் கவுன்சில் புதிய விதிகளின்படி, வழக்கறிஞர்களாக பணியாற்றுபவர்கள், உரிய கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன், பார் கவுன்சிலுக்கு
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இவ்விதிகள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தாக்கல் செய்ய, அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட்டது. இது குறித்து, தமிழ்நாடு பார் கவுன்சில் இடைக்கால குழுவின் உறுப்பினர்கள், டி.செல்வம், அமல்ராஜ் கூறியதாவது: தமிழக, புதுச்சேரி வழக்கறிஞர்கள், இம்மாத இறுதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பிக்காத வழக்கறிஞர்கள் பெயர்கள், 'விண்ணப்ப படிவங்களை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர்கள்' பட்டியலில் சேர்க்கப்படும். இதையடுத்து, வழக்கறிஞர் பணியை தொடர விரும்பாதவர்களாக கருதி, 'வழக்கறிஞர் பணியை தொடராத வழக்கறிஞர்கள்' பட்டியலிலும் சேர்க்கப்படும். இதனால், அந்த வழக்கறிஞர்கள், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில், ஓட்டளிக்க முடியாது. கடந்த, 2010 ஜூலை முதல், வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்கள், பார் கவுன்சில் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றனரா, இல்லையா என்பதை அறிய, அதற்கான படிவத்தை இம்மாதம் இறுதி வரை சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.