WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 11, 2016

டி.இ.ஓ.,தேர்வு முடிவு.

பள்ளி கல்வித்துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலியிடங்களுக்கு, 2015, ஆகஸ்டில், முதன்மை எழுத்துத் தேர்வு நடந்தது. இதில், 2,432 பேர் பங்கேற்றனர். இவர்களில், 35 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு பெற்றதாக, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. இவர்களுக்கு, நவ., 21ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது. இதேபோல், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 24 காலியிடங்களுக்கான, 'குரூப் - 3 ஏ' எழுத்துத் தேர்வு, 2013 ஆகஸ்டில் நடந்தது. இதில், 46 ஆயிரத்து, 797 பேர் பங்கேற்றனர் இவர்களில், 843 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, நவ., 25 முதல் டிச., 2 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டோரின் விபரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.