WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 11, 2016

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை, தேர்வுத்துறை சேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் தனியாக, 14 இலக்க நிரந்தர பதிவெண் வழங்கப்பட்டது. இந்த பதிவெண், கல்லுாரிகளில் மாணவர்கள் சேரும் போதும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.