Sunday, November 6, 2016
தேர்வு முடிவுகள்:டி.என்.பி.எஸ்.சி.சுறு சுறு.,
‛‛அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளை நடத்துவதிலும், அவற்றின் முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சுறுப்சுறுப்பாக உள்ளது,‛‛ என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறினார்.
தமிழகம் முழுவதும் குரூப் 4 தேர்வு நடந்தது.சென்னை திருவல்லிக்கேணி பள்ளியில் நடந்த தேர்வை பார்வையிட்ட டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி கூறியதாவது:
ஆக.,9ம் தேதி வெளியான அறிவிக்கையின்படி இளம்நிலை உதவியாளர் தட்டச்சர் உள்ளிட்ட 5,451 அரசு பணியிடங்களுக்காக, 5,296 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது. 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். இத்தேர்வை, 5,296 கண்காணிப்பாளர்கள், 76 ஆயிரத்து 216 துணை கண்காணிப்பாளர்கள் கண்காணித்தனர்.
12 மாதங்களில், 22 தேர்வு முடிவுகள்: கடந்த, 12 மாதங்களில், டி.என்.பி.எஸ்.சி., மூலம், 15 எழுத்துத் தேர்வுகள், 13 போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 12 மாதங்களில், 22 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஜூன், 16ம் தேதி வரை நடந்த அனைத்து போட்டி தேர்வுகளில், டி.இ.ஓ., தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு விட்டன. டி.இ.ஓ., தேர்வு முடிவும் விரைவில் வெளியிடப்படும்.
இதுதவிர, இன்னும் 10 தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும். அத்தேர்வுகள், ஜூன், 16ம் தேதிக்கு பிறகு நடந்தவை. 85 பணியிடங்கள் கொண்ட குரூப் 1 தேர்வுக்கான தேதி, வரும், 9ம் தேதி வெளியிடப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.