WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 6, 2016

பள்ளி, கல்லூரிகளில் துப்புரவு பணியாளர்: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி.

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி விடுதிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நவ., 15 கடைசி என
பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலிங்கம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கீழ் இயங்கும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி கள் விடுதிகளில் காலியாக உள்ள 2 பெண் முழு நேர துப்புரவு பணியாளர்கள், தலா 9 ஆண் பெண் பகுதிநேர துப்புரவு பணியாளர் பணியிடங் கள் சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளன. தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 2016 நவ., 1 தேதியில் ஆதி திராவிடர் மற்றும் பழஙங்குடியினருக்கு 18 முதல் 35 வயதிற் குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபி னருக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இதர பிரிவினர் 30 வயது மிகாமல் இருக்க வேண்டும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பெயர் மற்றும் முகவரி, கல்வி தகுதி, ஜாதி, முன்னுரி மை விபரம், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு, குடும்ப அடடை முதலான நகல்கள் மற்றும் இரண்டு புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரிக்கு நவ., 15 க்குள் அனுப்ப வேண்டும். தகுதி யானவர்களுக்கு நேர்கானல் நடைபெறும் என அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.