Monday, November 7, 2016
சென்னை பல்கலை சிண்டிகேட் தேர்தல்:கல்வி துறை இயக்குனர்கள் புறக்கணிப்பு.
கல்லுாரி முதல்வர்களும் உறுப்பினர்களாக இருப்பர்.
மூன்று இடம் காலி
மேலும், சென்னை பல்கலையில் பணியாற்றுவோரில், மூத்த உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர்களில் தலா, ஒருவர், சென்னை பல்கலை துறைத் தலைவர்களில், மூத்தவர்களில் தலா, மூன்று பேர் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் எட்டு பேரும் உறுப்பினர்களாக இருப்பர். இதில், துறை தலைவர்களுக்கான மூன்று இடங்கள் காலியாக உள்ளன.
செனட் பிரதிநிதிகளில் ஒருவரான பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஜூனில் ஓய்வு பெற்றார். அந்த காலியிடத்திற்கு, பல்கலை செனட் கூட்டத்தில், நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. சென்னை பல்கலை ஆங்கில துறை தலைவர், ஆர்ம்ஸ்ட்ராங், வரலாற்று துறை தலைவர்
எஸ்.எஸ்.சுந்தரம் இருவரும் போட்டியிட்டனர்.
பதிவான, 114 ஓட்டுகளில், 74 ஓட்டுகள் பெற்று, பேராசிரியர் சுந்தரம் வெற்றி பெற்றார். புதிய சிண்டிகேட் உறுப்பினரின் பதவிக்காலம், மூன்று ஆண்டுகள். சிண்டிகேட் உறுப்பினர் தேர்தலில் ஓட்டளிக்க, 128 செனட் உறுப்பினர்கள் தகுதி பெற்றனர். ஆனால், 114 ஓட்டுகளே பதிவாகின.
ஓட்டளிக்கவில்லை
இதில், செனட் உறுப்பினர்களான, உயர் கல்வி செயலர் கார்த்திக், கல்லுாரி கல்வி இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ராஜேந்திர ரத்னு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், சட்டப்படிப்புகள் துறை இயக்குனர், மருத்துவ கல்வி இயக்குனர் உள்ளிட்ட, எட்டு அரசு உயர் அதிகாரிகள் ஓட்டளிக்கவில்லை. அரசு அதிகாரிகளே தேர்தலை புறக்கணித்தது, மாணவர்கள் மத்தியில் தேர்தல் மீதான நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.