WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 4, 2016

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'.


முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. கோவை மாவட்டம், சூலுார்
தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.