WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 22, 2016

Breaking news: வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து ரொக்கமாக பணம் எடுக்க அனுமதி RBI

"பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:– கடந்த 3 மாதங்களாகவும், அதற்கும் மேலாக
நடைமுறையில் இருக்கும் நடப்பு கணக்குகளை வைத்திருப்பவர்கள் வாரம் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் தங்கள் கணக்கிலிருந்து ரொக்கமாக பணம் எடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த பரிசீலனைக்கு பிறகு இந்த வரம்பை ஓவர் டிராப்ட் (மேல்வரைப்பற்று), ரொக்க கடன் வசதி ஆகிய வசதிகளைக்கொண்டுள்ள கணக்குகளை வைத்திருப்பவர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 3 மாதங்களாகவோ அல்லது அதற்கும் மேற்பட்ட காலத்தில் நடப்பு கணக்கு, ஓவர்டிராப்ட், ரொக்க கடன் வசதி ஆகிய வசதிகளை கொண்டுள்ள கணக்குகளில் இருந்து வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரை ரொக்கமாக எடுத்து கொள்ளலாம். இந்த அனுமதி தனிநபர் கணக்குகளில் ஓவர் டிராப்ட் வசதியை பெற்றவர்களுக்கு பொருந்தாது. மேலும் இந்த ரொக்கப்பணம் ரூ.2,000 நோட்டுகளாக மட்டுமே வழங்கப்படும். மேற்கண்ட தகவல் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநில கூட்டுறவு வங்கிகள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது." - வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கான உச்சவரம்பில் மாற்றம்; ரிசர்வ் வங்கி..

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.