WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 22, 2016

85 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு; டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவிப்பு.


"தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்–1 தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான அறிவிக்கையை கடந்த 9–ந்தேதி வெளியிட்டது. 85 காலிபணியிடங்களுக்கு டிசம்பர் 8–ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 19–ந்தேதி நடக்கிறது. தகவல்களை மாற்றக்கோரி வரும் விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), சீர்மரபினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு கட்டண சலுகையை ஏற்கனவே பயன்படுத்தியிருந்தால் அவர்கள் கண்டிப்பாக தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். உண்மையை மறைத்து தேர்வு கட்டணம் செலுத்தாமல் உள்ள விண்ணப்பதாரர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது." - 85 பணியிடங்களுக்கான குரூப்–1 தேர்வு; டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் அறிவிப்பு http://tz.ucweb.com/11_10zW0

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.