WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 22, 2016

அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை.

"மேட்டுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் 83 மாணவர்களுக்கு 2 ஆசிரியர்களே பணியில் உள்ளதால் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க
வேண்டும் என பெற்றோர்கள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மேட்டுப்பாளையம் கிராமத்தில் அரசு ஆரம்பப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 83 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை மூன்று ஆசிரியர்கள், ஒரு தலைமையாசிரியர் பணியில் இருந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன் ஒரு ஆசிரியரும், கடந்த மாதம் ஒரு ஆசிரியரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது இப்பள்ளியில் ஒரு ஆசிரியர், ஒரு தலைமையாசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களே மாறி, மாறி பாடம் நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித்தரத்தை கருத்தில் கொண்டு, இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறுகையில், இந்தப் பள்ளியை மாதிரி பள்ளியாக மாற்ற தனியார் பள்ளிகளில் கல்வி கற்று வந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்த்துள்ளோம். தற்போது இரண்டு ஆசிரியர்களே பணியில் உள்ளதால் மாணவர்களின் கல்வித்திறன் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, மேட்டுப்பாளையம் அரசுப் பள்ளிக்கு போதுமான ஆசிரியர்களை நியமிக்க மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்." - அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை http://tz.ucweb.com/11_10Adp

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.