WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 21, 2016

10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2018-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வு கட்டாயமாகிறது. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் 10-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், பொதுத் தேர்வையோ அல்லது பள்ளி அளவிலான தேர்வையோ தேர்வு செய்துகொள்ளலாம் என்ற நிலை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் அனைத்து மாணவர்களையும் போல், சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்துவதை கட்டாயமாக்குவதற்கு மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கடந்த மாதம் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்தச் சூழலில் சிபிஎஸ்இ நிர்வாகக் குழுக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்துவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்ற முடிவுக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக சம்மதம் தெரிவித்ததாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முடிவை அமல்படுத்துவதற்கு முன்பாக, மத்திய அரசு ஒப்புதல் அளித்தாக வேண்டும் 10-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுமானால், 80 சதவீத மதிப்பெண்கள் பொதுத் தேர்வு அடிப்படையிலும், 20 சதவீத மதிப்பெண்கள் பள்ளி அளவிலான மதிப்பீட்டின் அடிப்படையிலும் வழங்கப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது, 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஹிந்தி, ஆங்கிலம், நவீன இந்திய மொழி என மும்மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அதை 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ நிர்வாகக் குழு பரிந்துரை செய்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.