WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 21, 2016

ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வு: ஜனவரி 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது.

அனைத்துப் பள்ளிகளிலும் கடந்த 7,8 ஆகிய நாள்களில் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டுத் தேர்வை வரும் ஜனவரி 2, 3 ஆகிய நாள்களில் நடத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில், பிளஸ்-2 தேர்வு கடந்த 7-இல் தொடங்க இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் திடீர் மறைவால் 6-ஆம் தேதி முதல் 8-ஆம் தேதி வரையில் விடுமுறை அளிக்ககப்பட்டிருந்தது. எனவே மேலே குறிப்பிட்ட நாள்களில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 2,3 ஆகிய நாள்களில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதை அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள், தங்கள் மாவட்டத்தில் உள்ள பள்ளி தலைமையாசிரியருக்கும் சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.