Wednesday, December 21, 2016
வரும் 24 முதல் பள்ளி அரையாண்டு விடுமுறை.
"அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்து, வரும், 24ம் தேதியில் இருந்து, ஜன., 1 வரை விடுமுறை அளிக்கப்படும் என்று, பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த, 7ல், அரையாண்டு தேர்வு துவங்கியது. மொழித்தாளை தொடர்ந்து, பிற தேர்வுகள் நடைபெற்று வருகிறது. நாளை மறுதினம், தேர்வுகள் முடிவு பெறுகின்றன. அதை தொடர்ந்து, 24ம் தேதி முதல், வரும், ஜன., 1ம் தேதி வரை, ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்படும் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பும் போது, மாணவர்களுக்கான புத்தகங்கள் வழங்க, தமிழ்நாடு பாடநூல் கழகத்திடம் இருந்து தருவிக்கப்பட்டுள்ளதாக, முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஜெ., மரணம், வர்தா புயல் காரணமாக, சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. கல்வித்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், டிச., 7 மற்றும், 8ம் தேதி நடக்க இருந்த அரையாண்டு தேர்வுகள், ஜன., 3 மற்றும் 4ல் நடைபெறும்; டிச., 14ல் நடைபெறவிருந்த தேர்வு, ஜன., 5ல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது." - வரும் 24 முதல் பள்ளி அரையாண்டு விடுமுறை http://tz.ucweb.com/12_1hzVk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.