WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 26, 2016

பி.டெக்., படித்தால் நேரடி பிஎச்.டி., ஐ.ஐ.டி.,யில் விதிகள் தளர்வு.

இந்திய உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளில், முதுநிலை பட்டப்படிப்பு முடித்த பின், பிஎச்.டி., படிக்க வேண்டும். அதற்கு, முதுநிலை படித்த பின், 'நெட்' என்ற தேசிய தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன் பின், பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில் சேர்க்கப்படுவர். ஆனால், ஐ.ஐ.டி.,க்களில், பிஎச்.டி., படிப்போர் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பேராசிரியர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்க, திறமையான மாணவர்களை நேரடியாக, பிஎச்.டி.,யில் சேர்க்க, ஐ.ஐ.டி., நிர்வாகத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக, ஐ.ஐ.டி., கவுன்சில் கூடி, பிஎச்.டி., விதிகளை மாற்றியுள்ளது.இதன்படி, ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., படிக்கும் மாணவர்கள், 8.5 தர மதிப்பெண் பெற்றால் போதும். மாதம், 60 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையுடன், ஐ.ஐ.டி.,யில், பிஎச்.டி., படிப்பில் நேரடியாக சேர்க்க, ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.