WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, December 26, 2016

ஆறாம் வகுப்பு முதல் இனி ஆல் பாஸ் கிடையாது.

ஆறாம் வகுப்பு முதல், 'ஆல் பாஸ்' திட்டத்தை ரத்து செய்ய, மத்திய சட்டத்துறை அனுமதி அளித்துள்ளது.மத்திய அரசு, 2009ல் அமல்படுத்திய, கட்டாய இலவச கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை, மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும், 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். அதனால், எளிதாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள், ஒன்பதாம் வகுப்பில் தாய்மொழியையே எழுதவும், படிக்கவும் திணறும் நிலை ஏற்பட்டது. இது குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் புகார் அளித்ததால், சட்டத்தை மாற்ற முடிவு செய்த மத்திய அரசு, 2012ல் நிபுணர் குழுவை அமைத்தது. இக்குழுவின் பரிந்துரைப்படி, ஆறாம் வகுப்பு முதல், ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர, சட்ட அமைச்சகத்திடம், மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனுமதி கேட்டது. நேற்று முன்தினம் சட்ட அமைச்சகம் அனுமதி வழங்கியது.இனி, கட்டாய கல்வி சட்டத்தில், திருத்தம் கொண்டு வந்தால், ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே, இறுதி தேர்வு இல்லாமல், அடுத்த வகுப்புக்கு மாணவர்கள், நேரடியாக தேர்ச்சி செய்யப்படுவர்.ஆறாம் வகுப்பு முதல், ஆண்டு இறுதி தேர்வு எழுதி, அதில், உரிய மதிப்பெண் பெற்றால் தான், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற முடியும். வரும் கல்வி ஆண்டில், இந்த சட்டம் அமலுக்கு வரும் என, தெரிகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.