WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, December 28, 2016

"தேர்ச்சி பெறாத மாணவரையும் தேர்வெழுத அனுமதிக்கணும்'.


"பள்ளி வருகை பதிவேட்டில் உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்;
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, "டி.சி.,' கொடுக்கும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பள்ளி கல்வித்துறை இயக்குனர் அறிக்கை: நடப்பு கல்வியாண்டுக்கான, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர் பட்டியல் தயார் செய்யும் பணி, அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. சில மாவட்டங்களில், ஒரு சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, மாற்றுச் சான்றிதழ் கொடுத்து, வேறு பள்ளிக்கு செல்லும் படி வற்புறுத்துவதாக புகார்கள் வந்துள்ளன. தேர்வுத்துறை விதிமுறைபடி, வருகை பதிவேட்டில் உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரின் விவரமும் கட்டாயம் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். எவரது பெயராவது விடுபட்டால், விசாரித்து, சம்மந்தப்பட்ட அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை காப்பாற்ற, கல்வியில் பின்தங்கும் மாணவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றும் பணியை, ஒருசில பள்ளி தலைமை ஆசிரியர்கள் மேற்கொண்டு வந்தனர். இதனால், குறிப்பிட்ட சில மாணவர்கள், கடைசி நேரத்தில் தேர்வு எழுத முடியாத பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க, முன்கூட்டியே கல்வித்துறை இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.