WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 17, 2016

அரைகுறையாக அரையாண்டு தேர்வு : பாதிக்கப்பட்ட மாணவர்கள் அச்சம்.

புயலால் ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்யாமல், பள்ளிகளை திறந்தும், மூடியும் அரைகுறையாக தேர்வு நடத்துவதால், மாணவர்கள் அச்சமடைந்து உள்ளனர். 'வர்தா' புயல் பாதிப்பால், தெருவெல்லாம் மரங்கள் விழுந்து, சென்னையின் முக்கிய சாலைகள் எல்லாம், காட்டுக்கு செல்லும் வழிகள் போல் மாறின. பல பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகளில், மரங்கள் விழுந்து, கல்வி நிறுவன வளாகங்கள் குப்பைக் கூளமாக உள்ளன. அதே போல, மின்சாரமும் வரவில்லை. பள்ளிகளுக்கு மின்சாரம் வந்தாலும், வீடுகளுக்கு, முழுமையான மின் வினியோகம் மற்றும் குடிநீர் வசதி கிடைக்கவில்லை. அதனால், மாணவ, மாணவியர் பலர், பள்ளிகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. பல பள்ளிகள், இன்னும் குப்பையாக உள்ளதால், வகுப்புகளை நடத்த முடியவில்லை. இந்நிலையில், அரசின் கட்டாயத்தால், பள்ளிகள் திறக்கப்பட்டு, அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பல பள்ளிகளில் நிலைமை சீராகாததால் திறக்கப்படவில்லை. அதனால், அந்த பள்ளி மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. மற்றவர்களுக்கு தேர்வு நடக்கும் நிலையில், நாம் தேர்வில் தேர்ச்சி பெறுவோமா என, மனதளவில் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.