எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில், மத்திய அரசின் இட ஒதுக்கீட்டில் சேர, 'நீட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த
தேர்வுக்கு, இன்னும் சில தினங்களில் அறிவிப்பு வெளியாக உள்ளது.
இந்நிலையில், பார்லிமென்டில், லோக்சபா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, மத்திய சுகாதார துறை இணை அமைச்சர், அனுப்ரியா படேல் அளித்த பதில்: மாநில அரசுகளின் கருத்துகளுக்கு ஏற்ப, அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும், தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படும். 'நீட்' தேர்வுப்படி, மாநில கல்லுாரிகளின் மாணவர் சேர்க்கை மற்றும் இட ஒதுக்கீட்டில் குறுக்கீடு இருக்காது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.