'தேவையில்லாத புத்தகங்களை கொண்டு வர வேண்டாம்' என, மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
பள்ளி மாணவர்கள், ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு செல்லும் போது, அனைத்து பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், உணவு மற்றும் குடிநீர் போன்றவற்றை சுமந்து செல்கின்றனர். அதனால், சிறு வயது குழந்தைகளின் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், பாட புத்தகங்களின் அளவு குறைக்கப்பட்டு, அதற்கேற்ப பாட வேளைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இம்முறையை அமல்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம், அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'மாணவர்களுக்கு, தினமும் என்ன பாடம் நடத்த வேண்டும் என, திட்டமிட வேண்டும். அதற்கேற்ப, பாட புத்தகங்கள் மற்றும் நோட்டு புத்தகங்களை, அளவோடு கொண்டு வர, மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.