கோவை மாவட்டத்தில், 269 தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. கும்பகோண தீவிபத்துக்கு நிகழ்வுக்கு பின், பள்ளிகளின் உரிமம் புதுப்பிக்கும் போது, கட்டட வசதி, இடவசதி, தீயணைப்பு
துறை சான்றிதழ், சுகாதாரத்துறை சான்றிதழ் சரிபார்த்தபின், உரிமம் புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டுமென்ற, உத்தரவு கட்டாயமாக்கப்பட்டது.
தொடக்க கல்வி துறை கீழ், நர்சரி, பிரைமரி பள்ளிகளுக்கான, நடை முறைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில், மோசமான நிலையில் செயல்பட்ட, 39 பள்ளிகள், இதுவரை மூடப்பட்டன.
நடப்பாண்டில், உரிமம் புதுப்பிக்காமல் இயங்கும் பள்ளிகளை, ஆய்வு செய்யும் பணிகள், சமீபத்தில் நடந்தன. இதில், 37 பள்ளிகள், அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கண்டறியப்பட்டது.
இப்பள்ளிகளுக்கு, முதற்கட்ட நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. உரிய கால அவகாசத்திற்குள், உரிமம் புதுப்பிக்காத பள்ளிகளை, மூட முடிவு செய்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். தொடக்க கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், உரிமம் புதுப்பித்து பள்ளிகளை இயக்குமாறு, நோட்டீஸ் அளித்துள்ளோம். இந்த கால அவகாசம், பள்ளிகளுகேற்ப மாறுபடும். இதில் அலட்சியம் காட்டினால், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.