போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு, அரையாண்டு தேர்வுக்கான வினாத்தாள் தாமதமாக வந்ததால்,
இரண்டு மணி நேரம் தாமதமாக மாணவர்கள் தேர்வு எழுதினர்.
போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டியில், அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பிளஸ் 2 வகுப்பில், 164 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்ததால், கடந்த மாதம், 6ல் நடக்க இருந்த பிளஸ் 2 தமிழ் முதல் தாள் அரையாண்டு தேர்வு, ஜன., 2ல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதன்படி அரசம்பட்டி பள்ளியில் நேற்று காலை, 10:00 மணிக்கு, மாணவர்கள் தேர்வு எழுத தயாராயினர். ஆனால், வினாத்தாள் பள்ளிக்கு வராதது தெரியவந்தது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து, இரண்டு மணி நேரம் கழித்து, காவேரிப்பட்டணத்தில் இருந்து வினாத்தாள் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டு, பகல், 12:00 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுதினர்.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை தனலட்சுமி கூறியதாவது: காவேரிப்பட்டணத்தில் உள்ள நோடல் சென்டரில் இருந்து வினாத்தாள் எடுத்து வரவேண்டும். வினாத்தாளை அங்கிருந்து எடுத்து வர, ஆசிரியர்கள் என்னிடம், 200 ரூபாய் கேட்கின்றனர்.
இதை கண்டித்தால், என்னை ஆசிரியர்கள் மிரட்டுகின்றனர்.நோடல் சென்டர் காலை, 8:30 மணிக்கு திறக்கிறது. அதன்பிறகு வினாத்தாளை வாங்கி வந்திருக்க வேண்டும்.
ஆசிரியர்கள் இதை பின்பற்றவில்லை. இருப்பினும், காவேரிப்பட்டணத்தில் பணியாற்று வேறு ஒரு ஆசிரியர் மூலம், வினாத்தாளை வாங்கி வந்து, தேர்வு நடத்தி விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
« முதல் பக்கம்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.