அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் நவம்பர் 3 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லை னில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒருங்கிணைக் கப்பட்ட அசல் மதிப்பெண் சான் றிதழை நாளை காலை 10 மணி முதல், தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். இதர தேர்வர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தேர்வெழுதிய பாடங் களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.