WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 10, 2017

புதிய பென்ஷன் திட்டம் ரத்தாகுமா? ஊழியர்கள் எச்சரிக்கை.


''புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாவிட்டால், தமிழக அரசு மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்கும்,'' என, அரசு ஊழியர் சங்க
தலைவர் தமிழ்செல்வி எச்சரிக்கை விடுத்தார். திருவண்ணாமலையில், அரசு ஊழியர் சங்கத்தின், 12வது மாநில மாநாடு, 6ம் தேதி துவங்கி, மூன்று நாட்கள் நடந்தது. மாநாட்டில், அரசு ஊழியர் சங்க தலைவர் தமிழ்செல்வி பேசியதாவது: தமிழகத்தில், குறைந்த சம்பளத்துடன், 25 ஆண்டுகளாக, கடும் பணிச்சுமையில், மூன்று லட்சம் பகுதி நேர ஊழியர்கள் தவித்து வருகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தை ஒழிக்க வேண்டும்; இல்லையேல், தமிழக அரசு பெரும் போராட்டத்தை சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: எங்கள் கோரிக்கைகளை, அரசு நிறைவேற்றாவிட்டால், பிப்., 2ல், மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம்; மார்ச், 15ல், மாவட்ட தலைநகரங்களில் பேரணி; ஏப்ரல், 25 முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.