'அடுத்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கு, இன்ஜினியரிங் கல்லுாரிகள் அங்கீகாரம் பெற, நாளை முதல் விண்ணப்பிக்கலாம்'
என, மத்திய அரசின் கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.நாட்டில் உள்ள, தொழில்நுட்ப கல்லுாரிகள் எல்லாம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ.,யின் அங்கீகாரம் பெற்று இயங்குகின்றன. இதன்படி, தமிழகத்தில், 550 இன்ஜி., கல்லுாரிகள், 60 மேலாண் நிர்வாக கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள், அடுத்த கல்வி ஆண்டு, மாணவர்கள் சேர்க்கைக்கு அங்கீகாரம் பெற வேண்டும். இதற்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
'புதிய நிறுவனங்கள், பிப்., 4 வரையும், பழைய நிறுவனங்கள் அங்கீகார நீட்டிப்புக்காக, பிப்., 9 வரையும் விண்ணப்பிக்கலாம்' என, ஏ.ஐ.சி.டி.இ., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.