WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, January 3, 2017

ம.பி.,யில் ஆசிரியர்களுக்கு உடை கட்டுப்பாடு!


மத்திய பிரதேச மாநிலத்தில், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விரைவில் உடை கட்டுப்பாடு அமலுக்கு வருகிறது. ம.பி.,
மாநிலத்தில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ’எதிர்கால தலைமுறையை உருவாக்குவோர் என அடையாளம் காணப்படும் வகையில், ஆசிரியர்கள், தங்கள் உடையின் மீது, ’ஓவர்கோட்’ அணிய வேண்டும்; அதில், அவர்களது பெயர் பொறித்த, ’பேட்ஜ்’ இடம் பெற்றிருக்க வேண்டும்’ என, அம்மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜன., 4க்குள், இந்த உடையின் நிறம், வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு பணிகளை, முடிக்கும் பொறுப்பை, ’நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’யிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.