WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 20, 2017

மே.15-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்: மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் வாக்குறுதி.


தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக உள்ளாட்சி
தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு மீது இன்று (திங்கள்கிழமை) விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்பிரமணியம் அடங்கிய அமர்வு முன், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார், "வரும் மே 15-க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்" என உறுதியளித்தார். தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுதாக்கல் செய்தனர். இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். ‘அவசர கதியில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை’ என்று கூறி, நடக்கவிருந்த உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து, அக்டோபர் 4-ல் உத்தரவிட்டார். டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறும், அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்தது. இவ்வழக்கு நீதிபதிகள் நூட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கடந்த மாத இறுதியில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குமார், அவகாசம் கோரினார். பாரதி சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜரானார். விசாரணையை, பிப்., 10க்கு (இன்று), டிவிஷன் பெஞ்ச் தள்ளிவைத்தது. இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, மே மாதம், 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனை, ஏற்க மறுத்த நீதிமன்றமோ, "உத்தேச தேதி தேவையில்லை உறுதியான தகவலை சொல்லுங்கள்" என கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.