WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, February 1, 2017

2017 - 18ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!

2017 - 18ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதித் துறை அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் உடனுக்குடன் இங்கே.. இணைந்திருங்கள்!

தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படவில்லை. இன்று அறிவிக்கப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி இதனை அறிவித்தார். மேலும், வருமான வரி சமர்ப்பிக்கும் படிவம் எளிமையாக்கப்படும்.

* ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையுள்ள வருமானத்துக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* அதே சமயம், 50 லட்சத்தில் இருந்து 1 கோடி ரூபாய் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது.

* 80 சி பிரிவின் கீழ் வரிச் சலுகை பெறுவதற்கான உச்ச வரம்பு 4.5 லட்சமாக அதிகரிப்பு.

* வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

••• அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மையை புகுத்த நடவடிக்கை. 50 கோடி ரூபாய் ஆண்டு வருமான உள்ள சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு 5% வரி குறைப்பு

••• நவம்பர் 8 முதல் டிசம்பர் 31 வரை... 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை சுமார் 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.48 லட்சம் வங்கி கணக்குகளில் ரூ.80 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. பணமதிப்பிழக்கு நடவடிக்கையால் வருமான வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 35 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.