WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 17, 2017

'நீட்' தேர்வு விவகாரம்: மத்திய அமைச்சரிடம் திருச்சி சிவா கோரிக்கை.


தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) நடத்தப்படும் முறையில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வகை செய்து, மாநில
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா கோரிக்கை விடுத்தார். எம்பிபிஎஸ், பிடிஎஸ், மருத்துவப் பட்ட மேல் படிப்புகளில் சேர்வதற்கு தேசியத் தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்) முறையை 2016-17 கல்வியாண்டு முதல் மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனினும், நிகழ் கல்வியாண்டில் மட்டும் அத்தேர்வு முறையில் இருந்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்தது. இந்நிலையில், "நீட்' தேர்வு முறையில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் "தமிழ்நாடு எம்பிபிஎஸ், பல் மருத்துவப் படிப்புகள் சேர்க்கை சட்ட மசோதா', தமிழ்நாடு மருத்துவம், பல் மருத்துவ முதுகலை பட்டப்படிப்புகள் சட்ட மசோதா' ஆகியவை குரல் வாக்கெடுப்பு மூலம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த 1-ஆம் தேதி ஒருமனதாக நிறைவேறியது. இந்த சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கக் கோரும் கோப்புகளை மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவருக்கு தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா தில்லியில் புதன்கிழமை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரையும், வியாழக்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவையும் அவர்களது அலுவலகங்களில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புகள் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் திருச்சி சிவா வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இரண்டு மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைக்க மத்திய அரசு ஆதரவளிக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், ஜே.பி.நட்டா ஆகியோரிடம் இதுகுறித்து விளக்கினேன். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட "நீட்' விலக்கல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க ஆதரவு தருமாறு இரு அமைச்சர்களையும் கேட்டுக் கொண்டேன் என்றார் திருச்சி சிவா.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.