முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும்
தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வுக்கு (டான்செட்) விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 28 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நுழைவுத் தேர்வைப் பொருத்தவரை, எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர வரும் மார்ச் 25 -ஆம் தேதியும், எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான். படிப்புகளில் சேர மார்ச் 26 -ஆம் தேதியும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க பிப்ரவரி 20 கடைசி நாள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மாணவர்களின் நலனைக் கருதி, விண்ணப்பத் தேதியை பல்கலைக்கழகம் நீட்டித்துள்ளது. அதன்படி, வரும் 28 -ஆம் தேதி (பிப்.28) வரை இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களை www.annauniv.edu என்ற இணையதளத்தில் பெறலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.