WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, February 27, 2017

கல்வி கொள்கைக்கு ஆணையம்: ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

கல்வி கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு கட்ட போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய ஆசிரியர்
கூட்டணி துணை பொதுச் செயலாளர் ரங்கராஜன் தெரிவித்தார்.தேனியில் அவர் கூறியதாவது: பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழுவை இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாக நடை முறைப்படுத்த வேண்டும். கல்வி கொள்கைக்கு ஆணையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர், மத்திய நிதி அமைச்சர், ஆளுநருக்கு மனு அனுப்பியுள்ளோம்.எம்.பி., எம்.எல்.ஏ., க்களுக்கு மார்ச் 31ல் நினைவூட்டல் கடிதம் அனுப்புவோம். ஏப்.25ல், வட்டார தலை நகரங்கள், ஆக., 5ல், மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடக்கிறது.செப்.5ல், ஆசிரியர் தினத்தை புறக்கணிக்கும் வகையில் மாநில அளவில் தர்ணா நடத்த முடிவு செய்துள்ளோம். உலக ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு அக்.5ல், டில்லியில் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதுபோன்று 6 கட்டமாக போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.