வி.ஏ.ஓ., பதவிக்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, டி.என்.பி.எஸ்.சி., 2016, பிப்., 28ல், எழுத்து தேர்வை நடத்தியது. இதில், தேர்வானவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தி, காலியிடங்கள் நிரப்பப்பட்டன. இன்னும், காலியாக உள்ள, 147 இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, மார்ச், 13 முதல், 15 வரை நடக்க உள்ளது. இதற்கான பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வர தவறினால், பட்டியலில் உள்ளோருக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.