WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 22, 2017

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலி: மத்திய அரசு தகவல்.

நாடு முழுவதும் 1,400 ஐ.ஏ.எஸ் மற்றும் 900 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரா சிங் எழுத்துப்பூர்வமாக பதிலை தாக்கல் செய்துள்ளார். அதில் இந்தியா முழுமைக்கும் 6,396 ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தற்போது 4,926 பணியிடங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணிபுரிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். மீதமுள்ள 1,470 ஐ.ஏ.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறியுள்ளார். இதில் அதிகபட்சமாக பிகார் மாநிலத்தில் 128 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், உத்திரப்பிரதேச மாநிலத்தில் 117 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும், மேற்கு வங்க மாநிலத்தில் 101 ஐ.ஏ.எஸ் பணியிடங்களும் காலியாக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல நாடு முழுமைக்கும் 4,802 ஐ.பி.எஸ் பணியிடங்களில் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 3,894 ஐ.பி.எஸ் பணியிடங்களில் மட்டுமே அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீதமுள்ள 908 ஐ.பி.எஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.