WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 7, 2017

பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஆங்கிலம் முதல் தாளில் காப்பியடித்ததாக 9 மாணவர்கள் பிடிபட்டனர்.


பிளஸ் 2 பொதுத் தேர்வில் ஆங்கிலம் முதல் தாளில் காப்பியடித்ததாக 9 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த மார்ச் 2-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வெழுதும் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தடுக்க 4,000-க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ் முதல்தாள் தேர்வில் 3 மாணவர்களும் தமிழ் இரண்டாம் தாள் தேர்வில் 9 மாணவர்களும் காப்பியடித்ததாகப் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை நடைபெற்ற ஆங்கிலம் முதல்தாள் தேர்வில் காப்பியடித்ததாக அரியலூர், பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் கடலூர் மாவட்டத்தில் ஒரு மாணவரும் விழுப்புரம் மாவட்டத்தில் 5 மாணவர்களும் என மொத்தம் 9 மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். இதில் 4 பேர் தனித்தேர்வர்கள், 5 பேர் பள்ளி மாணவர்கள் ஆவர் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.