WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 7, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் விநியோகம் தொடக்கம்

                        teacher
கீச்சலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) விண்ணப்ப விற்பனையை தலைமை ஆசிரியர் பழனி சேகர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்), வரும் ஏப்ரல் 29-இல் இடைநிலை ஆசிரியர்களுக்கும், 30-இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் என இரு நாட்கள் நடைபெறுகிறது.
இதற்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருத்தணியை அடுத்துள்ள கீச்சலம் உயர்நிலைப் பள்ளியில் காலை 9 மணி முதலே நீண்ட வரிசையில் விண்ணப்பங்களை வாங்க ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் காத்திருந்தனர்.
தொடர்ந்து, கீச்சலம் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசேகர் ’டெட்' ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்ப விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
முதல் நாளிலேயே இடைநிலை ஆசிரியர்களுக்கான 325 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது. தாள் 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கான 200 விண்ணப்பங்கள் பகல் 12 மணிக்குள் விற்பனையாகி தீர்ந்து போனது.
பின்னர் உடனடியாக மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து கூடுதலாக 800 (தாள் 2)விண்ணப்பங்கள் வரவழைக்கப்பட்டு
4 மணிக்கு மேலும் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டது. முதல் நாளிலேயே 575 விண்ணப்பங்கள் விற்பனை ஆனது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 23-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் திருவள்ளூர் மாவட்ட வடக்கு ராஜவீதியில் உள்ள சி.எஸ்.ஐ. கெளடி மேல்நிலைப் பள்ளியில் ஒப்படைக்குமாறு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.



No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.