WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, March 7, 2017

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான கட்டணங்களை ரத்து செய்க: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள்.


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

இதுதொடர்பாக அந்த அமைப்பின் மாநிலத் தலைவர் எம்.செந்தில், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் கூட்டாக திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ''ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ம், தேர்வுக் கட்டணமாக ரூ.500-ம் (எஸ்சி, எஸ்டி வகுப்பினர், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.250) வசூலிக்கப்படுகிறது. படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களிடத்தில் தனியார் நிறுவனங்களைப் போல வியாபார நோக்கோடு ஆசிரியர் தேர்வு வாரியம் செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?

கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தகுதித் தேர்வு மூலம் விண்ணப்பக் கட்டணம், தேர்வு கட்டணம் என்ற பெயரில் ரூ.54 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கடும் வறட்சி நிலவுகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் தொழில்கள் முடங்கியுள்ளன. வார்தா புயலால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தகைய சூழலில் வேலையில்லாத இளைஞர்கள் தேர்வு கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்? என்பதை அரசு சிந்தித்துப்பார்க்க வேண்டும். எனவே, தகுதித் தேர்வுக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தேர்வுக்கட்டணத்தை முழுமையாக ரத்துசெய்ய வேண்டும். தகுதியுள்ள அனைவரையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.