WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 1, 2017

விழுப்புரத்தில் விடுமுறை திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு.

விழுப்புரம் மாவட்டத்தில், திட்டமிட்டபடி நாளை, பிளஸ் 2 தேர்வுகள் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் விழாவுக்காக, அந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது; அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் இயங்காது. ஆனால், தமிழகம் முழுவதும், பிளஸ் 2 தேர்வு நாளை துவங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பிளஸ் 2 தேர்வு என்னாகும் என, தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மார்ஸ் கூறுகையில், ''பிளஸ் 2 பொதுத்தேர்வு, திட்டமிட்டபடி நடக்கும். தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்கள், அதிகாரிகள் விடுப்பு எடுக்கக் கூடாது. மற்ற பள்ளி, கல்லுாரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.