WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 10, 2017

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி தாமதம்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி குறித்த அறிவிப்பு, இதுவரை வெளியாகவில்லை. ’அறிவித்த நாளில், தேர்வு முடிவு வெளியாகுமா’ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், கடந்த, 2ல் துவங்கியது; 2,427 தேர்வு மையங்களில், நான்கு லட்சத்து, 17 ஆயிரத்து 953 மாணவர்கள்; நான்கு லட்சத்து, 80 ஆயிரத்து, 810 மாணவியர் என, எட்டு லட்சத்து, 98 ஆயிரத்து, 763 பேர்; 31 ஆயிரத்து, 840 தனித்தேர்வர், 88 சிறைவாசிகள் தேர்வெழுதுகின்றனர்.


வழக்கமாக, பொதுத்தேர்வு துவங்கிய சில நாட்களில், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கும். ஒருபுறம் தேர்வும், மறுபுறம் விடைத்தாள் திருத்தும் பணியும் நடைபெறும். நடப்பாண்டு விடைத்தாள் திருத்தும் பணி, இதுவரை துவங்கவில்லை; அது குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை.


இம்முறை, தேர்வு துவங்கும் முன்பே, ’பிளஸ் 2 தேர்வு முடிவு மே 12ல் வெளியாகும்’ என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. எனினும், வழக்கத்துக்கு மாறாக விடைத்தாள் திருத்தும் பணி, இதுவரை துவங்கவில்லை.இதனால், ’அறிவித்த நாளில் தேர்வு முடிவுகள் வெளியாகுமா’ என்ற சந்தேகம், மாணவர், பெற்றோர் மத்தியில் எழுந்துள்ளது.


கல்வித்துறை அதிகாரிகளை கேட்டால், ’மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்., முதல் வாரத்தில், விடைத்தாள் திருத்தும் பணி துவங்கலாம்,’ என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.