அரசு உயர்நிலை பள்ளிகளில், தமிழ் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தமிழக தமிழாசிரியர் கழகம், நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது.
இது குறித்து, தமிழக தமிழாசிரியர் கழக தலைமை நிலைய செயலர் மதியழகன் கூறியதாவது:
தாய்மொழியான தமிழில், அனைத்து மாணவர்களும் தடுமாற்ற மின்றி பேசவும், எழுதவும், பயிற்சி அளிக்கும் வகையில், பள்ளிகளில் தமிழ் பாடத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
தற்போது, 10ம் வகுப்பு வரையுள்ள அரசு உயர்நிலை பள்ளிகளில், 300க்கும் மேற்பட்ட தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், அரசாணை, 266யை திருத்தி, தமிழ் பாடத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பிளஸ் 2 தேர்வில், தமிழக மாணவர்கள், தேர்வுக்கு நன்றாக தயாராகும் வகையில், முதல் தாளுக்கும், இரண்டாம் தாளுக்கும் இடையே விடுமுறை அளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் போது, ஆசிரியர்களுக்கு தேவையான இட வசதிகளை செய்து தருவதுடன், விடைத்தாள்களை குறைந்த எண்ணிக்கையில் வழங்க வேண்டும்.
இவை உள்ளிட்ட, 12 கோரிக்கைகளை வலியுறுத்தி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.