WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 31, 2017

விடைத்தாள் திருத்தும் பணி குளறுபடி தவிர்க்க கட்டுப்பாடு.


பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி ஏற்படாமல் தவிர்க்க தேர்வுத்துறை புது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பத்தம் வகுப்பு
தேர்வு மார்ச் 28 ல் முடிந்தது; இன்று பிளஸ் 2 தேர்வு முடிகிறது. இன்றே விடைத்தாள் திருத்தும் பணியும் துவங்குகிறது. கடந்த காலங்களில் பல குளறுபடிகள் அரங்கேறின.விடைக்குறிப்பின்படி வழங்கப்பட்ட அதிகபட்ச மதிப்பெண்ணை விட, விடைத்தாளில் கூடுதல் மதிபெண் கொடுத்தது, சில பக்கங்களை திருத்தாமலும், மதிப்பெண்ணை அதற்குரிய 'காலத்தில்' எழுதாமலும் விட்டது என பல தவறுகள் தெரியவந்தன. இதை சிலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெற்று ஊடகங்களில் வெளியிட்டனர். இதனால் தேர்வுத் துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டது.தற்போது, 'முதன்மைத் தேர்வர்கள், கூர்ந்தாய்வாளர்கள் விழிப்புடன் கவனிக்க வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், ஒரு முதன்மைத் தேர்வாளர் கட்டுப்பாட்டில், 10 உதவி தேர்வாளர்கள் மட்டுமே விடைத்தாள்களை திருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.