WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, March 10, 2017

’டெட்’ தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!.

                                   

டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண் பட்டியல், சுய விபரங்கள் இன்று வெளியாகின்றன.

தமிழகத்தில், 2012 முதல், 2014 வரை, ’டெட்’ தேர்வு முடித்தோர், தங்களுக்கு பணி நியமனம் கிடைக்குமா என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர். 

அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், ’காலியாக உள்ள, 1,111 ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர்’ என, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்து உள்ளது. 

அதற்கேற்ற வகையில், ஏற்கனவே, ’டெட்’ தேர்வு முடித்தோரின் மதிப்பெண் பட்டியலுடன், சுய விபரங்கள், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியாகின்றன.

தேர்வர்கள், இன்று காலை, 10:00 மணி முதல், மார்ச் 20, இரவு, 10:00 மணி வரை, ஆன்லைனில், சுய விபரங்களை திருத்தம் செய்யலாம் என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.