WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, June 1, 2017

ராஜராஜன் பற்றிய பிழை: பிளஸ் 1 பாடத்தில் மாறுமா?

'பிளஸ் 1 தமிழ் பாட புத்தகத்தில், ராஜராஜ சோழன் பற்றிய தவறான தகவல், இந்த ஆண்டிலாவது திருத்தப்பட வேண்டும்' என, வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.பிளஸ் 1 தமிழ் பாடப் புத்தகத்தில், ஏழாவது பாடமாக, தி.வை.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய, 'கல்வெட்டுகள்' பாடம் உள்ளது. அதில், தமிழில் கல்வெட்டுகள் தோன்றிய முறை, அவற்றின் உள்ளடக்கம், அவற்றை படியெடுத்து, பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதே பாடத்தில், மெய்கீர்த்தி தோன்றிய விதமும், அவற்றின் போக்கும் பற்றிய குறிப்புகள் வருகின்றன. அதில், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 893 என உள்ளது. ஆனால், முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தி எழுதப்பட்ட ஆண்டு, கி.பி., 983 ஆகும். அதாவது, ஒரு நுாற்றாண்டு தவறாக அச்சிடப்பட்டு உள்ளது. 
இது குறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் கூறியதாவது:தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும், 10 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், பிளஸ் 1 படிக்கின்றனர். அதே எண்ணிக்கையில், டி.என்.பி.எஸ்.சி., உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்காவும் தயாராகின்றனர்.அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும், 20 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு, தவறான வரலாற்று தகவல், தமிழக அரசால் புகட்டப்படுகிறது. இந்த ஆண்டு பள்ளி திறக்கும் முன், இந்த வரலாற்று பிழையை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.